ADDED : ஜூலை 15, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதியில் கணவர் பரிதாபமாக இறந்த நிலையில், மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சபாபதி, 55; இவரது மனைவி காமாட்சி. கடந்த 12ம் தேதி, இருவரும் குடும்ப பிரச்னை காரணமாக, கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள கோவிலில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற சபாபதி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது மனைவி காமாட்சி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
