ADDED : ஜூலை 15, 2026 10:53 PM
கடலுார்: கஞ்சா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்தவர்கள் காமராஜ் மகன் மகேஷ்குமார் 27; சக்கரவர்த்தி மகன் சுதாகர், 21; ஜெயராமன் மகன் ரஞ்சித், 25; செடுத்தான்குப்பம் கலியபெருமாள் மகன் சுபாஷ் சந்திரபோஸ், 25; நரியாங்குப்பம் பழனி மகன் தீனா, 26; ஆகியோர் மீது கடந்த 2024ம் ஆண்டு நெய்வேலி தர்மல் போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் அத்தியாவசிய பண்டங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மகேஷ்குமார், சுதாகர், ரஞ்சித், சுபாஷ்சந்திரபோஸ், தீனா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பேரில் 5 பேரும், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
