தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமி பலாத்காரம் தொழிலாளி கைது

சிறுமி பலாத்காரம் தொழிலாளி கைது

சிறுமி பலாத்காரம் தொழிலாளி கைது


ADDED : ஜூலை 15, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன் மகன் அய்யப்பன், 35; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் 2ம் வகுப்பு பயிலும், 6 வயது சிறுமியை அய்யப்பன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக, டாக்டர் பரிந்துரையின் பேரில், குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் கங்காமித்ரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us