ADDED : ஜூலை 15, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
வடலுார்: வடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே, வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக, நேற்று கடலுார் ரயில்வே போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்த நபர் பண்ருட்டி, அவுலியா நகரை சேர்ந்த காதர் மொய்தீன் மகன் முகமது ஹனீப், 21; என தெரியவந்தது.
இவர் வடலுார் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்ததும், நேற்று தண்டவாளத்தை கடந்து நடந்து சென்ற போது, வடலுார் வழியாக சென்ற சரக்கு ரயில் ஒன்றில் அவர் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.
இது குறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
