நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை அவரது உறவினர், சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ஹரிபிரசாத், 22, என்பவர் கடத்திச் சென்றார்.
இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, ஹரிபிரசாத்தை தேடி வருகின்றனர்.

