ADDED : மார் 28, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்லுாரி மாணவர் பஸ்சில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முதலியார்பேட்டை, உப்பளம் தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் அபிேஷக், 19; கல்லுாரி மாணவர். இவர் நேற்று கல்லுாரிக்கு சென்று, மதியம் தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பஸ் பழைய பஸ் நிலையத்தில் திரும்பிய போது, அபிேஷக் படிகட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
மாணவர் கீழே விழுந்து இறந்தது குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர் அவரது வீட்டில் ஓரே மகன் என்பது குறிப்பிடதக்கது.

