ADDED : ஆக 19, 2024 11:28 PM
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா; போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது மகன் சித்தார்த், 10; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சித்தார்த், நண்பர்கள் இருவருடன் தனது வீட்டு மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, வீட்டு மொட்டை மாடியில் கிடந்த அலுமினிய கம்பியை எடுத்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக அலுமினிய கம்பி அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பியின் மீது உராசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து மாணவர் சித்தார்த் துாக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த சித்தார்த்தை திருக்கனுார் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

