/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்சி மன்றக் குழு அமைக்க மாணவர், பெற்றோர் சங்கம் மனு
/
ஆட்சி மன்றக் குழு அமைக்க மாணவர், பெற்றோர் சங்கம் மனு
ஆட்சி மன்றக் குழு அமைக்க மாணவர், பெற்றோர் சங்கம் மனு
ஆட்சி மன்றக் குழு அமைக்க மாணவர், பெற்றோர் சங்கம் மனு
ADDED : ஜூலை 03, 2024 05:38 AM
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன், கவர்னர், முதல்வரிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை பதிவாளர் பதவி வரும், 2024ம் ஆண்டு அக்டோபரில் நிறைவு பெறுகிறது.
தொழில்நுட்ப கல்லுாரியின் துணைவேந்தர் பதவி காலமும் வரும், 2026 ஆம் கல்வியாண்டில், நிறைவு பெற உள்ளது.
பல்கலை ஆட்சிமன்றக்குழுவை அமைத்து, குழு உறுப்பினர்களை நியமிக்க உடனே உத்தரவிட வேண்டும். புதுச்சேரி மாநில உயர்கல்விக்குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும்.
சென்டாக் கன்வீனர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே, கன்வீனர் பதவிக்கான நியமனத்துக்கு சட்ட திட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.