/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் படிப்புக்கு சேர்க்கை கவர்னர், முதல்வருக்கு மாணவர் பெற்றோர் சங்கம் கோரிக்கை

ADDED : மே 24, 2024 04:14 AM
புதுச்சேரி: செவிலியர் படிப்பிற்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என புதுச் சேரி மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
செவிலியர் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது செவிலியர் படிப்பிற்கு சென்டாக்கில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற மாணவர்கள் மீண்டும் நுழைவு தேர்வு எழுதும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் ஏழை மாணவர்கள் செவிலியர் பயிலும் வாய்ப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பு செயலர் 15.04.2024 தேதியில் வெளியிட்டுள்ள ஆணைப்படி செவிலியர் படிப்பிற்கான அரசு மற்றும் நிர்வாக செவிலியர் இடங்களுக்கு மத்திய பல்கலைக் கழகத்தால் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவித்தனர்.
ஆனால் சுகாதார துறையும், தனியார் செவிலியர் கல்லுாரி நிர்வாகமும் தற்போது நுழைவு தேர்வினை நடத்தும் என தெரிய வந்துள்ளது.
இதற்கான எந்த ஏற்பாட்டையும்,நடைமுறை விதிமுறைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.இதுபோன்ற நுழைவு தேர்விற்கான அடிப்படை கட்டமைப்பு ஏதும் செய்யப்படவில்லை.
எனவே புதுச்சேரியில் செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும்.
இது தொடர்பாக கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர், சுகாதாரத் துறை செயலர், இயக்குனர் நல்ல முடிவினை எடுத்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.