/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்
/
உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்
உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்
உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்
ADDED : மே 28, 2024 03:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்1 மாணவர் சேர்க்கை துவங்கியது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 2024-25, கல்வியாண்டில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கு, விண்ணப்ப விநியோகம், கடந்த, 13,ம் தேதி துவங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த, 22ம், தேதி வரை பெறப்பட்டன.
பின் அரசு பள்ளிகளில் சேர தகுதி, நேர்காணல் தேதி, இடம், நேரம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
அதன்படி நகர பகுதிகளில் நேற்று மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறையில், பிளஸ்1 மாணவர் சேர்க்கை துவங்கியது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு,அவர்களின் அனைத்து சான்றிதழ்களும் சரி பார்த்து சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில்,முன்னுரிமை கொடுத்து இடம் வழங்கப்பட்டது.
ஆங்கிலம்,இயற்பியல்,வேதியியல்,கணிதம்,கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாட பிரிவுகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் காட்டினர்.
தொடர்ந்து சேர்க்கைக்கு பிறகு ஏற்பட்டுள்ள காலி இடங்கள் ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது.