ADDED : ஆக 26, 2026 08:12 PM
புதுச்சேரி: ஏ.பி.வி.பி., மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டதால், போராட்டங்கள் விலக்கி கொள்ளப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான நிர்வாக குழுவினர், மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகள் உரிய கால அளவில் நிறைவேற்றி தருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் உமாயின், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து எழுத்துப்பூர்வமான ஆணையை வழங்கினர். இதையடுத்து, மாணவர்களின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
பின், ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் தீபன் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் துணை ஒருங்கிணைப்பாளர் அற்பித் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
