ADDED : ஆக 26, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு துவக்கப்பள்ளி அருகில் பள்ளமாக இருந்த சாலை சீரமைக்கப்பட்டது.
தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளி மற்றும் குண்டு தாங்கிய ஐயனாரப்பன் கோவில் உள்ளது. அந்த பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் முதல்வரை சந்தித்து வலியுறுத்தினார். அதையடுத்து, அந்த பகுதி சாலை சீரமைக்கும் பணி நடந்தது. இந்த பணி நடக்க காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
