/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுபிக் ஷா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
சுபிக் ஷா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 15, 2024 12:59 AM

வில்லியனுார் : சுபிக் ஷா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
வில்லியனுார் அடுத்த வி.மணவெளி திரிவேணி நகரில் உள்ள சுபிக் ஷா ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 56 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி ஜெயப்பிரியா 485 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர்கள் கோகுல் 468 மதிப்பெண், ெஹன்றிதீபக் 460 மதிப்பெண்கள் பெற்று முறைய இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
5 மாணவர்கள் 450க்கு மேலும், 400ல் இருந்து 450 வரை 11 பேரும், 350ல் இருந்து 400 வரை 19 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர்.
பாடவாரியாக அதிகபட்சம் தமிழ்-97 மதிப்பெண், ஆங்கிலம்-98, கணிதம்-96, அறிவியல்-99, சமூக அறிவியல்-97 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களை பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி இளவரசு, பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
அவர், கூறுகையில், கிராம பகுதி மாணவர்களை கொண்ட இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோர்களுக்கு நன்றி' என்றார்.

