/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பொது விநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள்'
/
'பொது விநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள்'
'பொது விநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள்'
'பொது விநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள்'
ADDED : ஆக 14, 2024 05:59 AM
புதுச்சேரி : மானிய கோரிக்கைகள் மீதான விவாத்திற்கு பதில் அளித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் பேசியதாவது;
ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டு வசதி
காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தினை செயல்படுத்த பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் முழுமைபெற்று நடைமுறைக்கு வரும். வீட்டு வசதி வாரியம் ரூ. 20 கோடி நிலுவை தொகையுடன், ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாத நிலையில் உள்ளது.
அதனை சீரமைக்கும் முறையில் முதல் கட்டமாக வாரிய கைவசம் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் கட்டடப்பட்ட முருங்கப்பாக்கம் வீடுகள், காரைக்காலில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இ-ஆக் ஷன் ஏலம் விட்டு கடன் தொகையை செலுத்தி நிதி சிக்கலில் இருந்து விடுபட்டவுடன், வாரியம் செம்மைப்படுத்தப்படும்.
காலியாக உள்ள நுாலக தகவல் உதவியாளர்கள், இளநிலை நுாலக உதவியாளர்கள் பணியிடம் நிரப்படும். புதுச்சேரி மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 உதவி பேராசிரியர் பணியிடம் விரைவில் நிரப்படும்.
அரிக்கன்மேட்டில் புதுச்சேரி பண்டைய ரோமன் வாணிபத்தை நினைவு கூறும் வகையில் ரோமன் சரக்கு கப்பல் வடிவத்தில் அருங்காட்சியத்துடன் கூடிய ஒரு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என கூறினார்.

