ADDED : ஆக 15, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: தேத்தாம்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால், கோபமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 11:00 மணி அளவில் தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு நுழைவு வாயிலை பூட்டினர்.
தகவலறிந்த காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில், மழையின் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால், மின்தடை ஏற்பட்டது. இனி தடை இல்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.