/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தபால் துறை வாகனம் திடீர் ரத்து பாட புத்தகங்கள் எடுத்து செல்ல சிக்கல்
/
தபால் துறை வாகனம் திடீர் ரத்து பாட புத்தகங்கள் எடுத்து செல்ல சிக்கல்
தபால் துறை வாகனம் திடீர் ரத்து பாட புத்தகங்கள் எடுத்து செல்ல சிக்கல்
தபால் துறை வாகனம் திடீர் ரத்து பாட புத்தகங்கள் எடுத்து செல்ல சிக்கல்
ADDED : ஜூன் 30, 2024 05:02 AM
புதுச்சேரி, ' தபால் துறை வாகனம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், காரைக்கால் அரசு பள்ளிகளுக்கு தமிழ் பாட புத்தகத்தை அனுப்ப முடியாமல் கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 89 ஆயிரம் மாணவர்களுக்கு தையல் கூலி உள்பட சி.பி.எஸ்.இ., புத்தகம், நோட் புக், சீருடை துணிகள் ஆகியவை 13 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கல்வித்துறை சார்பில் வாங்கப்பட்டது.
இவைகள் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளுக்கு, புதுச்சேரி தபால் துறை வாகனம் மூலம் அனுப்பும் பணி கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது.
புதிய பாடத்திட்டத்திற்கு மூன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு பாடத்திட்டம் மாறியதால் அதற்கான பாட புத்தகங்கள் இதுவரை பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு வரவில்லை.
இந்நிலையில், புதுச்சேரியில் வழங்கப்பட்டது போல் பாட புத்தகம் உள்பட அனைத்து பொருட்களும் காரைக்காலில் 7 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட 108 அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டது.
விடுப்பட்ட தமிழ் பாட புத்தகம் மட்டும் நாகப்பட்டினம் தமிழ்நாடு பாடநுால் கழகம் குடோனில் இருந்து காரைக்கால் பள்ளிகளுக்கு எடுக்கும் நேரத்தில், கல்வித்துறைக்கு ஒப்பந்த முறையில் இயங்கி வந்த தபால் துறை வாகனத்தை திடீரென தபால் துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர்.
இதனால் காரைக்கால் கல்வித்துறை அதிகாரிகள் வேறு வாகனங்கள் இல்லாமல் பத்து நாட்களுக்கு மேலாக புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் தனியார் வாகனத்தை டெண்டர் எடுத்து நாளை முதல் தமிழ் மற்றும் பல்வேறு பாட புத்தகங்கள் அனுப்பும் பணியை மீண்டும் துவக்க உள்ளனர்.