/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வுகள் 'திடீர்' ஒத்தி வைப்பு
/
எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வுகள் 'திடீர்' ஒத்தி வைப்பு
எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வுகள் 'திடீர்' ஒத்தி வைப்பு
எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வுகள் 'திடீர்' ஒத்தி வைப்பு
ADDED : ஆக 04, 2024 09:22 PM
புதுச்சேரி:புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ், நான்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லுாரிகளில் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்றைய தினம் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், இந்த தேர்வை பல்கலை திடீரென ரத்து செய்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக, திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று இணைப்பு கல்லுாரிகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ உதவி பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேர்வு ரத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முதலாமாண்டு
எம்.பி.பி.எஸ்., தேர்விற்கான வினாத்தாள் கசிந்ததே தேர்வு ஒத்தி வைப்பிற்கான காரணம் என்று தகவல் பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி, தனியார் மருத்துவக்கல்லுாரியில் உள்ள சில இடங்களுக்கு பல்கலை., அனுமதி அளிக்கவில்லை எனவும், அனுமதிக்க காலதாமதம் ஆனதால், தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.