/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை
/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை
புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை
புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை
ADDED : மார் 27, 2024 07:15 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கஞ்சா வரும் பாதைகளை கண்ட றிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பார்சல் வரும் அலுவலகங்களிலும், ஆம்னி பஸ்களில் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நேற்று மதியம், டில்லியில் இருந்து புதுச்சேரி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசெல்வம், ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் பைரவா துணையுடன் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். கஞ்சா ஏதும் சிக்கவில்லை. குட்கா பான்மசாலா கடத்தி வந்த நபர் சிக்கினார்.
அவரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.