/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வூதியர்களுக்கான நிலையான மருத்துவ அலவன்ஸ் நிறுத்தம்
/
ஓய்வூதியர்களுக்கான நிலையான மருத்துவ அலவன்ஸ் நிறுத்தம்
ஓய்வூதியர்களுக்கான நிலையான மருத்துவ அலவன்ஸ் நிறுத்தம்
ஓய்வூதியர்களுக்கான நிலையான மருத்துவ அலவன்ஸ் நிறுத்தம்
ADDED : பிப் 09, 2025 06:09 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான மருத்துவ அலவன்ஸ் நிறுத்தப்படுவதாக கணக்கு மற்றும் கருவூலக இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கணக்கு மற்றும் கருவூலக இயக்ககம், இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் புதுச்சேரியில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, சுகாதார திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை கடந்த நவ., 6ம் தேதி தலைமை செயலகம் வெளியிட்டது.
அதன்படி, புதுச்சேரி, வில்லியனுார், பாகூர் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர்க்கும், பல்வேறு வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுவோர்க்கும், பிப்ரவரி மாதம் முதல் அவர்களுக்கு இதுநாள் வரையில் அளிக்கப்பட்டு வந்த 'நிலையான மருத்துவ அலவான்ஸ்' நிறுத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஓய்வூதியதாரர்கள் விண்ணப்ப படிவத்துடன் அந்தந்த கருவூலம் மற்றும் வங்கிகள் மூலம் பெற்ற நிலையான மருத்துவ அலவான்ஸ் நிறுத்தப்பட்டதற்கான சான்றிதழ், ஆதார் நகல், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை கதிர்காமம், அரசு மருத்துவமனையில் செயல்படும் நலவாழ்வு மையத்திலோ அல்லது சென்னை, ராஜாஜி பவன், கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவமனையில், நலவாழ்வு மையத்தின் பொறுப்பாளரை நேரில் அணுகலாம். மேலும், விவரங்களை கணக்கு மற்றும் கருவூலக இயக்குநரகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகியோ அல்லது dat.py.gov.in இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.