நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை கிராமத்தில் உள்ள ஏழைமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி ஐய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது.
கடந்த 21ம் தேதி அம்மனுக்கு சாகை வார்த்தலும், மாலையில் செடல் உற்சவமும் நடந்தது. முக்கிய விழாவாக 22ம் தேதி இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா, 23ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.
நேற்று இரவு 7:30 மணிக்குமேல் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுளை பெரம்பை கிராம பொதுமக்கள் செய்தனர்.

