
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் தேவஸ்தானத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் 13ம் ஆண்டு ஆடி கடை ஞாயிறு வைபவம் நடந்தது.
இதையொட்டி காலை 8:00 மணிக்கு மாட வீதியாக 108 பால்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு மகா அபி ேஷகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு மகா தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.