sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழமல்லன் 75வது பிறந்தநாள் விழா

தமிழமல்லன் 75வது பிறந்தநாள் விழா

தமிழமல்லன் 75வது பிறந்தநாள் விழா


ADDED : ஏப் 25, 2024 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 03:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர், தமிழமல்லன் 75வது பிறந்தநாள் விழா, புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

விழாவிற்கு, புதுவைத் தமிழ்க் கலை மன்றம் தலைவர் ஆறுசெல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன் வரவேற்றார். 'தமிழமல்லன் சிறுவர் கதைகள்' நுாலை கலக்கல் காங்கேயன் அறிமுகப்படுத்தினார். பள்ளி தலைமையாசிரியர் சுந்தரராஜன், முதுநிலை உதவிப் பேராசிரியர் குருமூர்த்தி முருகன், நண்பர்கள் தோட்டம் தலைவர் திருநாவுக்கரசு, திரைப்படநடிகர் அப்துல் செரீப் , தமிழ்வேந்தன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக டி.கே. குழுவின் இளையோர் சிலம்ப கலை நிகழ்ச்சியும், முனைவர் கணேசு சத்திரிய கழகத்தின் மல்லர் கம்பம் கலைநிகழ்ச்சியும் நடந்தது.

தமிழமல்லன் ஏற்புரை வழங்கினார். காலையில் நடந்த மாணவர்களின் ஓவியப் போட்டியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில், தமிழமல்லன் வசிக்கும் தெருவுக்கும், அரசுப்பள்ளி ஒன்றுக்கும் தமிழமல்லன் பெயரைப் புதுச்சேரி அரசு சூட்டவேண்டும், அவர் பெயரால் தனித்தமிழ்நூல்களுக்கு விருது ஒன்று வழங்க ஏற்படுத்த வேண்டும். தமிழமல்லன் பிறந்தநாளைத் தனித்தமிழ் நாள் என்று அரசு அறிவிக்கவேண்டும். பாடத்திட்டத்தில் அவருடைய படைப்புகள் இடம் பெற ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓவியர் சக்தி குருநாதன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us