/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்து பா.ஜ., பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
/
ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்து பா.ஜ., பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்து பா.ஜ., பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்து பா.ஜ., பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 09, 2024 02:42 PM
ADDED : ஏப் 08, 2024 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் போராடி பெற்ற உரிமையை, மத்திய மோடி அரசு பறிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார் ரங்கசாமி என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
புதுச்சேரி காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அவர், பேசியதாவது: புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தி.மு.க, - காங்., பாடுபட்டுக்கொண்டு இருக்க, புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கி கொண்டு செல்லலாம் என்று, பா.ஜ., மறுபக்கம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் சபாநாயகராக இருந்தபோது, புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண்பேடி மோதல் போக்கை கடைபிடித்தார்.
மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், ரேஷன் அரிசியை தடை செய்தார். மக்களால் தேர்ந்தெடுத்த முதல்வர் நாராயணசாமிக்கு ஒத்துழைக்காமல், அரசியலைப்பு கடமையை காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்தது பா.ஜ.,
முதல்வர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. பா.ஜ., விற்கு கைப்பாவையாக இருக்கிறார். 10 ஆண்டு மோடி ஆட்சியில் புதுச்சேரிக்குஇழைக்கப்பட்ட அநீதிகள் தான் அதிகம். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இங்கு ஓட்டு சேகரிக்க வந்த மோடி பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவேன் என கூறினார். ஆனால் செய்யவில்லை. நாராயணசாமி கட்சி மேலிடத்தை கேட்டு நடப்பதாக குறைகூறினார்கள். புதுச்சேரியில் முதல்வராக இருப்பது ரங்கசாமி.
அவர்களது கூட்டணியில் ரங்கசாமியின் கட்சி தான் பெரியது. புதுச்சேரியில் பா.ஜ.,தான் போட்டியிடும் என,ரங்கசாமி வாயால் சொல்ல வைத்துவிட்டது பா.ஜ.,ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமே நமச்சிவாயம் தான். ஆனால் விதி, இப்ப நமச்சிவாயத்துக்கு ஓட்டுகேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்த கட்சியை கட்டுப்பாட்டில் வைப்பது தான் ஜனநாயகமா என கேள்வி எழுகிறது.
உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்திருந்தவரை தேர்தலில் நிறுத்தியுள்ளனர். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறியுள்ளார் என கணக்கு போட்டு பார்த்தால் எனக்கே தலை சுற்றுகிறது. ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ., பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது. புதுச்சேரி மக்கள் போராடி பெற்ற உரிமையை, மத்திய மோடி அரசு பறிக்கவிட்டு வேடிக்கை பார்கிறார்ரங்கசாமி.
மற்றொரு பக்கம் பாதம் தாங்கி பழனிசாமியின் அ.தி.மு.க., வருகிறது. அந்த கூட்டணியை பற்றி சொல்ல ஒன்றுமில்லை. சிம்ப்ளி வேஸ்ட். சாதி, மத, இன, மொழி கடந்து புதுச்சேரி மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடியவர்கள். மோடி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு புதுச்சேரி மக்கள் பலியாகிவிடக்கூடாது. இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஓட்டு இந்தியாவை காக்கும், புதுச்சேரியை காக்கும். நாற்பதும் நமதே, நாடும் நமதே சிலிர்த்து எழுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

