ADDED : மார் 02, 2025 06:59 AM

புதுச்சேரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா அறிவுறுத்தலின்படி, உருளையன்பேட்டை தொகுதி ராஜிவ் காந்தி நகர் கிளை, தொகுதி இளைஞர் அணி ரமேஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினரும், தொகுதி பொறுப்பாளருமான கோபால் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மாநில நிர்வாகிகள் செல்வா, குரு, வீரைய்யன், ஸ்ரீதர், ரெமி எட்வின், தெய்வேந்திரன், சேட்டு, தொகுதி அவைத் தலைவர் ஆதிநாராயணன், தொகுதி பொருளாளர் சசிகுமார், கிளை செயலாளர்கள் சுப்பு, விஜயகுமார், அகிலன், கிரி, நெல்சன், நிர்வாகிகள் ராஜா, மூர்த்தி, ராஜா, பாக்கியராஜ், மணிகண்டன், விஜயராகவன், அருள், ராஜ்கமல், முரளி, அரவிந்த், வினோத், வெங்கடேசன், பிரகாஷ், பாலா, ஆனந்து, பிரவீன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.