ADDED : பிப் 25, 2025 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காலபுர்கி, கர்நாடகா மத்திய பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் 3.0 பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பயிலரங்கில் அகத்தியர் மாமுனிவரின் சித்த வைத்தியம், அவரின் தமிழ் இலக்கிய பணிகள் ஆகிவை குறித்து கலந்துரையாடல் நடந்தது. இதில், கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, பதிவாளர் பிர்தார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

