/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்று ஆசிரியர் தின விழா: கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
இன்று ஆசிரியர் தின விழா: கவர்னர், முதல்வர் வாழ்த்து
இன்று ஆசிரியர் தின விழா: கவர்னர், முதல்வர் வாழ்த்து
இன்று ஆசிரியர் தின விழா: கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : செப் 05, 2024 05:12 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆசிரியர் தின விழாவையொட்டி, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன்: ஆசிரியர்களின் கடமை உணர்வையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் போற்றும் நாளாக, இந்த ஆசிரியர் தினம் அமைகிறது. சிந்தனை வளமும் செயல் திறமும் மிகுந்த வலிமைமிக்க பாரதத்தை உருவாக்க, ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
முதல்வர் ரங்கசாமி: ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கி தருவதில் தங்கள் வாழ்நாளை செலவிடும், ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இந்த நாளில் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் அகம் மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செயலாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோரும், ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.