/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்கள் இடமாற்றத்தில் சிரமம் உள்ளது; அமைச்சர் பேச்சு
/
ஆசிரியர்கள் இடமாற்றத்தில் சிரமம் உள்ளது; அமைச்சர் பேச்சு
ஆசிரியர்கள் இடமாற்றத்தில் சிரமம் உள்ளது; அமைச்சர் பேச்சு
ஆசிரியர்கள் இடமாற்றத்தில் சிரமம் உள்ளது; அமைச்சர் பேச்சு
ADDED : செப் 06, 2024 04:16 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர்களை இட மாற்றம் செய்வதில் சிரமங்கள் உள்ளதாக, ஆசிரியர் தின விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
அவர் பேசியதாவது:
கல்விதுறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வந்துள்ளோம். இதனை கொள்கை முடிவாக எடுக்கும் போது சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். தனி நபர்களுக்காக கொள்கை முடிவு எடுக்க முடியாது. ஆசிரியர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது.
திறமையான ஆசிரியர்களை பணி அமர்த்தி வருகிறோம். இதனால் அரசியல் ரீதியாக பல சிரமங்கள் உள்ளன. காலி பணி இடங்களை நிரப்ப உள்ளோம்.
தேசிய அளவில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க வசதியாக, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.
கடந்த காலத்தில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாததால் சில கஷ்டங்கள் உள்ளன.
அனைவரும் நகரத்தில் பணியாற்ற முடியாது. அப்படி எனில், கிராமப்புற மாணவர்களுக்கு யார் கல்வி அளிப்பது என்ற கேள்வி எழுகிறது. தொடர்ந்து இடமாற்றல் செய்யும் போது இந்த குறை நீங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.