/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர்களை தாக்கிய வாலிபர் கைது
/
சிறுவர்களை தாக்கிய வாலிபர் கைது
ADDED : மே 26, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சிறுவர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் பாலாஜி, 28; இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள காலியான இடத்தில் நேற்று மது குடித்தார். அந்த இடத்தில் திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த வழியாக சென்ற சிறுவர்கள், பிரியன், 16; குமலேஸ், 16; ஆகியோரிடம் கேட்டு அவர்களை பாலாஜி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.