/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
கல்லுாரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
கல்லுாரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
கல்லுாரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : ஆக 31, 2024 02:43 AM
புதுச்சேரி: கல்லுாரி மாணவியை கடத்தி சென்று, திருப்பதி ஓட்டலில் அறை எடுத்து தங்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது மாணவி, தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.சி.ஏ., படித்து வந்தார். கடந்த 22ம் தேதி மாலை கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவி, வாட்ஸ் ஆப்பில் தன்னை தேட வேண்டாம் என பெற்றோருக்கு மெசேஜ் செய்து விட்டு சுவிட்ஆப் செய்து விட்டார். தனது மகளை வைத்திக்குப்பம், ராஜிவ்காந்தி வீதியைச் சேர்ந்த ராஜராஜன் மகன் மாதேஷ், 22; கடத்தி சென்றுள்ளார் என லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாதேஷ் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ள மாதேஷ், சென்னையைச் சேர்ந்த பிரியாங்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். லாஸ்பேட்டை இ.சி.ஆர்., தேக்வாண்டோ பயிற்சி பள்ளியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேர்ந்து தான் பயிற்சி செய்யும் வீடியோ, புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளம் பெண்களுக்கு வலை வீசினார். மாதேஷின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்ந்த 17 வயது மாணவி அவருடன் பழகி வந்தார்.
இதன் மூலம் மாணவிக்கு காதல் வலை வீசிய மாதேஷ், இருவரும் சேர்ந்து கராத்தே பயிற்சி கூடம் துவங்கலாம் என ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. மாதேஷின் மனைவி பிரியங்கா தானாக முன்வந்து, மாதேஷ் திருப்பதியில் பதுங்கி இருக்கும் தகவலை தெரிவித்தார்.
பிரியங்கா வழியாக மாதேஷிடம் போலீசார் பேசினர். தான் மும்பையில் இருப்பதாகவும், தன்னை யாரும் பிடிக்க முடியாது என சவால் விட்டார். மாதேஷ் பேசிய மொபைல் போன் டவர் சிக்னலை கொண்டு, போலீசார் திருப்பதி சென்றனர். அங்கு, தனியார் ஓட்டலில் மாணவியுடன் தங்கியிருந்த மாதேசை போலீசார் கைது செய்து, மாணவியை மீட்டு புதுச்சேரி கொண்டு வந்தனர்.
தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்ட மாதேஷ் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததுள்ளது தெரியவந்தது. லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் வந்த பிரியங்கா, தனது தாலியை கழற்றி மாதேஷ் முகத்தில் வீசி விட்டு சென்றார்.
மாதேஷ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால், கடத்தல் வழக்கை போக்சோ பிரிவின் கீழ் மாற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.