/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம்
/
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூலை 18, 2024 11:07 PM
புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து எஸ்.பி., வடக்கு மற்றும் கிழக்கு எஸ்.பி., செல்வம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி - கடலுார் சாலை நைனார்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள நாக முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று மதியம் 2.00 மணி முதல் புதுச்சேரி-கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பக்கம், வில்லியனுார், இந்திராகாந்தி சதுக்கம் வழியாக புதுச்சேரிக்கு வர வேண்டும்.
அதேபோல் புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கடலுார் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வெங்கட சுப்ப ரெட்டியார் சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம், வில்லியனுார், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம், தவளகுப்பம் வழியாக கடலுார் செல்ல வேண்டும்.
கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் முருங்கபாக்கம் சந்திப்பில் இருந்து, இடது பக்கம் திரும்பி கொம்பாக்கம் அரவிந்தர் நகர், வேலராம்பேட் ஏரிக்கரை, மரப்பாலம் சந்திப்பு வழியாக புதுச்சேரிக்கும், அதேபோல் புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் இருசக்கர வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி வேல்ராம்பேட் ஏரிக்கரை, அரவிந்தர் நகர் வழியாக கொம்பாக்கம், முருங்கபாக்கம் சந்திப்பு வழியாக கடலுார் செல்ல வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.