ADDED : மார் 13, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, மார்ச் 13-
மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் சங்கத்தினருடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுகாதாரத்துறை ஊழியர்கள் வாரிசுதாரர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி பல நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுப்பட திட்டமிட்டு கம்பன் கலையரங்கம் அருகில் திரண்டனர். இதை அறிந்த சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், தனி சிறப்பு அதிகாரி ஜோஸ்பின் சித்ரா, கண்காணிப்பாளர் சிவக்குமார் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.