/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
/
அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
ADDED : பிப் 09, 2025 06:12 AM

பாகூர்: தென்பெண்ணையாற்றில் போர்வெல் அமைப்பது தொடர்பாக, சோரியாங்குப்பத்தில் அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர் அருகே உள்ள தென்பெண்ணையாற்று படுகையில் இருந்து பொதுப்பணித்துறை சார்பில், போர்வெல் அமைத்து நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தென்பெண்ணையாற்றின் கரையோரமுள்ள தமிழக கிராமங்களான மருதாடு, நத்தப்பட்டு உள்ளிட்ட கிராம மக்களும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலுார் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவிலில் பொதுப்பணித்துறை சார்பில் இது தொடர்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பேசுகையில், போர்வெல் அமைக்கப்பட்டு, நகர பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல உள்ளோம். அதற்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தண்ணீரை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். கடலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், உப்பு நீர் உட்புகுந்து விடும் என்றனர்.
இதற்கு, அமைச்சர் ஆதரவாளர்கள் சிலரும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அமைச்சர் முன்னிலையிலேயே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
பாகூர் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, அமைச்சரும், அதிகாரிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் சோரியாங்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.