ADDED : ஏப் 25, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.
காரைக்கால், தலத்தெரு சிவலோகநாதசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த தங்க மாரியம்மன் கோவில் தீமிதிருவிழா கடந்த 21ம் தேதி துவக்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு அபிேஷகம் ஆராதனை நடந்தது. பின், மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு (வெள்ளை சாற்று) வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. வரும் 27ம் தேதி சாகை வார்த்தல், 29ம் தேதி தீமி திருவிழா நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி சரவணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

