ADDED : மார் 03, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையுடன் நோன்பு நேற்று துவங்கியது.
திருக்குர் ஆன் அருளப்பட்ட புனித மாதமாக ரம்ஜான் மாதத்தை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
இந்த மாதத்தில் அதிகாலையில் உணவருந்தி, பகல் பொழுது முழுவதும் தண்ணீர், உணவு சாப்பிடா மல் மாலையில் இப்தார் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதனை அடுத்து, நேற்று பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்தனர்.
புதுச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில், இப்தார் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.