/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிறிஸ்துவர்கள் தவக்காலம் துவக்கம்
/
கிறிஸ்துவர்கள் தவக்காலம் துவக்கம்
ADDED : மார் 06, 2025 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி, இயேசு உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் வரை கடைபிடிக்கப்படுகிறது.
சாம்பல் புதன் தினத்தையொட்டி,நேற்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுடன் திருப்பலி நடந்தது.
புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
நெற்றியில் சாம்பல் பூசி தவ காலத்தை துவங்கினர்.