/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் 30ம் தேதி வரை நீட்டிப்பு
/
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் 30ம் தேதி வரை நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் 30ம் தேதி வரை நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் 30ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : செப் 18, 2024 04:24 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ., களில் மாணவர் சேர்வதற்கான கால அவகாசம் செப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் சேர்வதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதிவ ரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்கள், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய மதிப்பெண் சான்றிதழ், இறுதியாக பயின்ற கல்வி நிலையத்தில் பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழுடன் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை சந்தித்து சேரலாம்.
வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வில்லியனுார் அரசு தொழிற்பயிறசி நிலையம், பாகூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. பயிற்சியில் சேர விரும்பம் மாணவர்கள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை சந்தித்து சேரலாம். முதலில் வரும் மாணவர்ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடனடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடக்கும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

