/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருளில் மூழ்கிய இ.சி.ஆர்., சாலைக்கு ஒரே நாளில் விடிவு
/
இருளில் மூழ்கிய இ.சி.ஆர்., சாலைக்கு ஒரே நாளில் விடிவு
இருளில் மூழ்கிய இ.சி.ஆர்., சாலைக்கு ஒரே நாளில் விடிவு
இருளில் மூழ்கிய இ.சி.ஆர்., சாலைக்கு ஒரே நாளில் விடிவு
ADDED : செப் 11, 2024 02:45 AM

புதுச்சேரி,: புதுச்சேரியில் ஒரு மாதமாக இருளில் மூழ்கிக்கிடந்த இ.சி.ஆர் சாலை, 'தினமலர்' செய்தி எதிரொலியால், ஒரே நாளில் சரி செய்யப்பட்டது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் முருகா தியேட்டர் வரையுள்ள, இ.சி.ஆர்., போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையை நாள்தோறும், பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையே, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, மின் விளக்குகள் எரியாமல். இருண்டு கிடந்தது.
குறிப்பாக, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் ராஜிவ் சிக்னல் வரை 4.3 கி.மீ.,தொலைவிற்கு இ.சி.ஆர்., இருள் சூழ்ந்து கும்மிருட்டாக கிடந்தது. அதுமட்டுமின்றி, ராஜிவ் சிக்னலில் உள்ள ைஹமாஸ் விளக்கு கடந்த இரண்டரை மாதமாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் கும்மிருட்டில் மூழ்கியது. இதையடுத்து அப்பகுதியில் விபத்து அபாயம் பன்மடங்காக அதிகரித்தது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில், புகைப்படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, இ.சி.ஆரில்., மின்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், நேற்று காலை முதல் மின் இணைப்பை சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, நேற்று இரவு ராஜிவ் சிக்னல் துவங்கி, காமராஜர் மணிமண்டபம் வரை, இ.சி.ஆரில் எரியாமல் இருந்த அனைத்து சென்டர் மீடியன் தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு ஒளிர்ந்தன.

