/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்'
/
'குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்'
'குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்'
'குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்'
ADDED : பிப் 25, 2025 04:40 AM
புதுச்சேரி: 'குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்' என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
மக்கள் மன்றம் துவக்க விழாவில், அவர், பேசியதாவது:
'மக்கள் மன்றம்' திட்டத்தின் மூலமாக, சமூக பாதுகாப்பும், சமூக நீதியும், அரசின் மீதான மக்களின் நம்பிக்கையும் உறுதி செய்யப்படும். மக்கள் மன்றம் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் சுழற்சி முறையில் நடத்தப்படும். இதனால், மக்கள் எளிதாக அதிகாரிகளை அணுகி குறைகள், புகார்களுக்கு தீர்வு காண முடியும்.
இது போலீசாரின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தும். நான் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு, மக்கள் தங்கள் குறைகளை அனுப்பும் கடிதம் அதிக அளவில் வருவதைப் பார்த்தேன். அவற்றுக்கு தீர்வு காணும் நடைமுறையை விரைவுபடுத்த தனியாக ஒரு மக்கள் குறைதீர்ப்பு பிரிவை ஏற்படுத்தினேன்.
அதுமட்டும் அல்லாமல் கவர்னர் மாளிகையின் இரண்டு வாசல்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, என்னுடைய நேரடி பார்வையில் இருக்கிறது. அதில், போடப்படும் கடிதங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை அரசு மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத சூழலில் குழந்தைகள் தங்கள் குறைகளை பயம் இல்லாமல், தயக்கம் இல்லாமல் சொல்வதற்கு இந்த பள்ளி புகார் பெட்டி திட்டம் உதவியாக இருக்கும்.
விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். போலீசாரின் பாதுகாப்பு திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, குறைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.

