/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலில் வென்றால் தான் எதிர்காலம்: கூட்டணி கட்சிகளுக்கு நாராயணசாமி 'அட்வைஸ்'

ADDED : மார் 23, 2024 06:14 AM
புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் தான் நமக்கு எதிர்காலம் இருக்கும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி காங்.,கட்சி அலுவலகத்தில் நடந்த காங்., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர், பேசியதாவது:
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வைத்திலிங்கம் 2 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றார். அப்போது நாம் ஆளும் கட்சியாக இருந்தோம். இப்போது நாம் எதிர்கட்சி வரிசையில் உள்ளோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை. இதனால் லோக்சபா தேர்தல் காங்., வெற்றிக்கு சாதகமாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. வேலையில்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. சிறுமி படு கொலை செய்யப்பட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் ஆளும் கட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். பா.ஜ., சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
எனவே, மின் துறை தனியார்மயம், ஸ்மார்ட் மீட்டர், சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவைகளை தேர்தல் பிரசாரத்தின்போது முன்னிறுத்தி சந்திக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு லோக்சபா தேர்தல் தான் முன்னோட்டம்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தான் நமக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் எதிர்காலம் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.