/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்த கவர்னர்
/
மணக்குள விநாயகர் கோவிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்த கவர்னர்
மணக்குள விநாயகர் கோவிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்த கவர்னர்
மணக்குள விநாயகர் கோவிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்த கவர்னர்
ADDED : ஆக 15, 2024 04:52 AM
புதுச்சேரி: கவர்னர் கைலாஷ்நாதன் தனது குடும்பத்துடன், கவர்னர் மாளிகையில் இருந்து நடந்து சென்று மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனுக்கு நேற்று 72வது பிறந்த நாள். பிறந்த நாளையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் இருந்து தனது குடும்பத்தினருடன் நடந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார்.
கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பெயரில் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு விநாயகர் சிலை வழங்கப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளித்தேரை பார்வையிட்ட கவர்னர் கைலாஷ்நாதன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். சாமி தரிசனத்திற்கு பிறகு மீண்டும் நடந்தே கவர்னர் மாளிகைக்கு திரும்பிச் சென்றார்.
முதல்வர் வாழ்த்து
கவர்னர் கைலாஷ்நாதன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு சட்டசபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பூஜ்ய நேரம் முடிந்தவுடன், சபாநாயகர் செல்வம் பிறந்த நாள் காணும் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு தனது சார்பிலும், சட்டசபை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறினார்.
சட்டசபை முடிந்ததும், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.