sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓட்டல் உரிமையாளர்களே உஷா;ர் நுாதன முறையில் பணம் மோசடி

/

ஓட்டல் உரிமையாளர்களே உஷா;ர் நுாதன முறையில் பணம் மோசடி

ஓட்டல் உரிமையாளர்களே உஷா;ர் நுாதன முறையில் பணம் மோசடி

ஓட்டல் உரிமையாளர்களே உஷா;ர் நுாதன முறையில் பணம் மோசடி


ADDED : மே 22, 2024 06:57 AM

Google News

ADDED : மே 22, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி ஓட்டலில் உணவு ஆர்டருக்கு தவறுதலாக கூடுதல் பணம் அனுப்பிவிட்டதாக கூறி நுாதன முறையில் பணம் மோசடி செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஹரிபிரசாத், மரப்பாலம் சந்திப்பு அருகே ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் ஒருவர், ரூ. 650க்கு உணவு ஆர்டர் கொடுத்ததாகவும், ஆனால், தவறுதலாக ரூ. 6050 அனுப்பி விட்டதாக கூறினார்.

பணம் அனுப்பியதுபோல் எஸ்.எம்.எஸ். அனுப்பி தன்னுடைய மீத பணத்தை திருப்பி செலுத்துமாறு கூறினார்.

அதை நம்பி ஹரிபிரசாத் ரூ. 5400 பணத்தை மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். விசாரணையில், மர்ம நபர் ஏமாற்றியது தெரியவந்தது.

இது போல் புதுச்சேரியில் ஓட்டல் வைத்து நடத்தி வரும் குணசேகர் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ரூ.1260 உணவு ஆர்டர் கொடுத்தார். ஆனால் ரூ. 11,260 பணம் தவறுதலாக அனுப்பி விட்டதாகவும், மீத பணத்தை திருப்பி அளிக்குமாறு கூறியுள்ளார்.

கூடுதல் பணத்தை மர்ம நபருக்கு அனுப்பிய பின்பு வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ரூ.1 மட்டுமே அனுப்பி ஏமாற்றியது தெரியவந்தது.

உருளையன்பேட்டையைச் சேர்ந்த வினோத், ஆன்லைனில் விபசாரத்தில் ஈடுப்படும் கால் கேர்ள்ஸ் தேடினார். அப்போது கிடைத்த ஒரு மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, பெண்ணை அனுப்பி வைப்பதாகவும், அதற்கு ரூ. 40 ஆயிரம் பணம் அனுப்ப கூறியுள்ளார். வினோத் பணத்தை அனுப்பிய பின்பு மர்ம நபர் போனை துண்டித்து ஏமாற்றினார்.

காரைக்காலைச் சேர்ந்த ஜாபர்சாதிக்கு குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக தகவல் வந்தது. அதில் இருந்த மொபைல்போனை தொடர்பு கொண்டு ரூ. 2 லட்சம் கடன் கேட்டார்.

அந்த நபர் கடன் பெற செயலாக்க கட்டணம் மற்றும் வரி ரூ. 28 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறினார். இதை நம்பி ரூ.28 ஆயிரம் பணத்தை செலுத்தி பிறகு அந்த நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

சாரம் சக்தி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து ஒரு லிங்க் வந்தது.

அதை உள்ளே சென்று டெபிட் கார்டு விவரங்களை பதிவிட்டார். சிறிது நேரத்தில் அவரது டெபிட் கார்டு கணக்கில் இருந்து ரூ. 24,720 பணம் எடுக்கப்பட்டது.

மேற்கூறிய 6 பேரிடம் சைபர் கிரைம் மோசடி கும்பல் ரூ. 1.09 லட்சம் பணத்தை திருடி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us