/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு தீபிடித்து எரிந்து ரூ.50 ஆயிரம் சேதம்
/
வீடு தீபிடித்து எரிந்து ரூ.50 ஆயிரம் சேதம்
ADDED : ஏப் 02, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், : காரைக்காலில் குடிசைவீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
காரைக்கால் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட மேலகாசாகுடி தென்பாதி பகுதியை சேர்ந்தவர் எடிசன். இவரது குடிசை வீட்டில் நேற்று முன்தினம் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இதில் வீட்டில் உள்ள கட்டில், பீரோ உட்பட ரூ.50ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது. நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

