நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஏம்பலம் அடுத்த கீழ்சாத்தமங்கலம் முதல் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மூத்த மகள் பிரியதர்ஷினி, 21; வடமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசில் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.