/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது
/
நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது
ADDED : மே 28, 2024 04:55 AM

கள்ளக்குறிச்சி : பெண்ணிடம் மொபைல் போனை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கா.மாமனந்தல் பகுதியை சேர்ந்தவர் சவரணகுமார் மனைவி அலமேலு,34; இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது, பின்தொடர்ந்து வந்த ஆசாமி, திடீரென அலமேலு கையில் வைத்திருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார்.
திடுக்கிட்ட அலமேலு கூச்சலிட்டு, பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அக்கராயபாளையம் குன்று மேட்டு தெருவைச் சேர்ந்த குன்னன் மகன் மகேந்திரன்,32; என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அலமேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்தனர்.