/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : மே 31, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு காந்தி நகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் ஜெனா, 19. இவர் நேற்று முன்தினம் மாலை மடுகரை மந்தைவெளி திடலில் கத்தியை வைத்துக் கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டினார்.
தகவலறிந்த மடுகரை போலீசார் அங்கு விரைந்து சென்று ஜெனாவை கைது செய்தனர்.