ADDED : மே 06, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : கொத்தனார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் ஜாபர் அலி, 23; கொத்தனார். திருமணம் ஆகாதவர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இவர் நேற்று முன்தினம் சோரியாங்குப்பம் மதுக்கடையில் குடித்துவிட்டு அங்குள்ள மேம்பாலத்தின் நடைபாதையில் உட்கார்ந்து விட்டார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.