/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போர்வெல் அமைக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
போர்வெல் அமைக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 02, 2024 05:09 AM

திருக்கனுார்: வாதானுாரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி வாதானுார் கிராமத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுப்பணி துறை மூலம் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, போர்வெல் அமைக்கும் பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், நிர்வாகிகள் தமிழ்மணி, கலியபெருமாள், பொதுப்பணித்துறை கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.