தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தி.மு.க., வெற்றி பெறும்: நாஜிம் நம்பிக்கை

தி.மு.க., வெற்றி பெறும்: நாஜிம் நம்பிக்கை

தி.மு.க., வெற்றி பெறும்: நாஜிம் நம்பிக்கை


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும் என, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

காரைக்காலில் அவர், கூறியதாவது:

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ரூ. 3.6 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தங்க நாணயங்கள் யாருடையது என, தேர்தல் ஆணையம் இதுவரை தெளிவான தகவலை வெளியிடவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் நகை வியாபாரிகளுக்கு சொந்தமானதா அல்லது அரசியல் பின்னணி அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு சொந்தமானதா என்பதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தங்க நாணயங்கள் யாருடையது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும், அது தொடர்பான முழு விவரங்களை தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பா.ஜ., வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவில்லை. புதுச்சேரியில் இண்டி கூட்டணி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது, என, தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us