UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:37 PM
புதுச்சேரி, அம்பேத்கர் சாலையில் உள்ள எக்ஸ்போ மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு போதையில் ரகளை செய்த, தேங்காய்த்திட்டு ராஜா, 41, என்பவரை ஒதியஞ்சாலை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் கைது செய்தார்.
பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் போதையில் ரகளை செய்த வாணரப்பேட்டை ஆசிப், 21, என்பவரை ஒதியஞ்சாலை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசுப்ரமணியன் கைது செய்தார்.
எல்.ஆர்.பாளையம் சர்க்கரை ஆலை 2வது கேட் அருகே நேற்று முன்தினம் காலை போதையில் ரகளை செய்த மரக்காணத்தை சேர்ந்த விநாயகம், 42, என்பவரை காட்டேரிக்குப்பம் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் கைது செய்தார்.
வில்லியனுார் சிமென்ட் குடோன் அருகில் நேற்று முன்தினம் இரவு போதையில் ரகளை செய்த கணுவாப்பேட்டை மூர்த்தி, 30; விஜய், 28, ஆகியோரையும், வில்லியனுார் பெட்ரோல் பங்க் அருகில் ரகளை செய்த மணமேடு சத்தியமூர்த்தி, 31; கிருமாம்பாக்கம் தீபன்ராஜ், 29; தவளக்குப்பம் ராஜேஷ், 30, ஆகியோரை காவலர் கணேஷ் கைது செய்தார்.
வில்லியனுார் பைபாஸ் எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பில் நள்ளிரவு ரகளையில் ஈடுபட்ட வில்லியனுார் விஜய், 30, புதுக்கோட்டையைச் சேர்ந்த மற்றொரு விஜய், 23, ஆகியோரை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் கைது செய்தார்.
