/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் இன்று பொறுப்பேற்பு
/
புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் இன்று பொறுப்பேற்பு
ADDED : ஆக 12, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் இன்று பொறுப்பேற்கிறார்.
புதுச்சேரி டி.ஜி.பி., யாக பணியாற்றி வந்த ஸ்ரீநிவாஸ் கடந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, டில்லியில் பணியாற்றி வந்த 1996 ஆண்டு பேட்ஜ் ஷாலினி சிங் புதுச்சேரி டி.ஜி.பி.,யாக நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று மாலை புதுச்சேரி வந்தார். இன்று 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, முறைப்படி புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்று கொள்கிறார்.

